பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்தநிலையல் அந்த பிராந்திய மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக உரிமை மீறல் அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். அரசு அலுவலகங்களில் பாகிஸ்தானிய கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர்.
அத்துடன் தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் என்பவர், பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனவே ஊடகங்கள் பலுசிஸ்தானை பாகிஸ்தானின் அங்கமாக குறிப்பிடவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். இனி பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல என்பது அவர்களின் முடிவாகும். எனவே இனிமேல் உலகம் அமைதியாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Related Posts

    • 13 views
    மக்களது விருப்பமின்றி திட்டங்களைத் திணிக்க முடியாது – ரவிகரன் காட்டம்!

    கடந்த யுத்த காலத்தில் “பாதுகாப்பு வலயம்” என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஒப்பிட்டு, மக்கள் இத்திட்டத்தால் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சுவதாகவும், இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மக்களும், பொது அமைப்புகளும் காற்றாலை மின்உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், இத்திட்டம் மன்னார்த் தீவில் அமைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்கிறார். மக்களின் எதிர்ப்பையும் மீறி, காற்றாலைக் கோபுரங்களின் பாகங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார்த் தீவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். மக்கள் விரும்பாத ஒரு திட்டத்தை அத்துமீறி திணிக்க முடியாது எனவும், அரசு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனால், மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 94 views
    නවසීලන්ත රජය ශ්‍රී ලංකාවට ලබාදෙන මූල්‍ය සහාය තවදුරටත්

    නිල සංචාරයක් සඳහා මෙරටට පැමිණ සිටින නවසීලන්ත නියෝජ්‍ය අග්‍රාමාත්‍ය සහ විදේශ කටයුතු අමාත්‍ය වින්සන්ට් පීටර්ස් මහතා සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අතර හමුවක් අද (26) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදි සිදු විය. පසුගිය ජනාධිපතිවරණයේදී මෙන්ම මහ මැතිවරණයේදී ද ලැබු සුවිශේෂී ජයග්‍රහණ පිළිබඳ මෙහිදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සහ නව රජය වෙත නවසීලන්ත රජයේ සහ ජනතාවගේ සුබපැතුම් පිරිනැමූ නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා දෙරට අතර දිගුකාලීන මිත්‍ර සබඳතා ඉතා ශක්තිමත් ලෙස තහවුරු කර ගැනීම තම රජයේ අරමුණ බවද කියා සිටියේය.  නව රජය යටතේ ශ්‍රී ලංකාවේ සිදු වෙමින් පවතින ධනාත්මක වර්ධනය පිළිබඳ සතුට පළ කළ නවසීලන්ත නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා දේශපාලන ස්ථාවරත්වය, ආර්ථික ස්ථාවරත්වය සහ සමාජ සංවර්ධනය වෙනුවෙන් නව රජය ගෙන යන වැඩපිළිවෙළ ඇගයීමට ලක් කළේය. එමෙන්ම රට නිවැරදි දිශාවට ගෙන යාමේ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වය නියෝජ්‍ය අග්‍රාමාත්‍යවරයා පැසසුමට ලක්…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *