Main Story

  • 15 views
ஒரே குட்டையில் ஊறிய மட்டை,A single puddle of mud,තනි මඩ ගොහොරුවක්

இலங்கையில் தீவிரமான தேர்தல் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.இதன்போது கொள்கை, கோத்திரங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமைக்கு உதாரணங்களும் நிகழ்கின்றன.இதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்தும் அடங்குகிறது.தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசசபைகளுக்கு நிதியொதுக்கீடுகளை கண்ணை மூடிக்கொண்டு வழங்கப்படும் என்றும்;, ஏனைய கட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்ட சபைகளின் நிதியொதுக்கீடுகள் தொடர்பில் பல தடவைகள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கொள்கைகளையே முன்னைய ஜனாதிபதிகளும் கடைப்பிடித்தனர்.அந்தக் கொள்கையே, உள்ளூர் மட்டத்தில், ஆளும் கட்சிகளின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு வழிவகுத்தது என்பதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. A single puddle of mud Sri Lanka is engaged in intense electoral politics.There are also examples of political and tribal differences not being taken into account.This includes the comments of President Anura Kumara Dissanayake.He has stated that financial allocations to the local Councils governed by the National People’s Power will be provided blindly, and that the financial allocations of the councils governed by other parties will be reviewed several times.These…

  • 62 views
இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம் வெளியிட்டுள்ளது.இதன் உண்மைத் தன்மை குறித்து யாரும் அறியாத நிலையில், இலங்கையை பொறுத்தவரையில், பொருளாதார மற்றும் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்தரமின்மை காரணமாக, பலமிக்க நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையை யாரும் மறுக்கமுடியாது.குறிப்பாக முன்னிலை சோசலிஸக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. India-Sri Lanka Security Agreement During the Indian Prime Minister’s visit to Sri Lanka, criticism has been expressed in politics regarding the security agreement to be signed between Sri Lanka and India.In particular, the Frontline Socialist Party has expressed its criticism.The party has expressed fear that due to this agreement, Sri Lanka will also be drawn into the Indo-China war.While no one knows…

  • 59 views
அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையை விட, குறைந்த கட்டண உடன்படிக்கையை, சம்பூர் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் அனுர அரசாங்கம் வேறு ஒரு இந்திய நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது.எனவே இங்கு தர்க்கரீதியான வாதத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்கிறது. விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அனுரகுமாரவும் உறுதியாக தெரிவித்து வருகிறார்எனினும் தாமும் முன்னைய நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று அதானி நிறுவனம் கூறுகிறது.மறுப்பக்கத்தில் மன்னார் மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இதனையும் அனுர அரசாங்கம் கருத்திற்;கொள்ளவேண்டியுள்ளது.அதேநேரம் இலங்கையின் வடக்கு மக்களின் நன்மதிப்பை தக்கவேண்டியது அவசியம் என்ற வகையில் இந்திய அரசாங்கமும் மன்னார் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவேண்டியுள்ளது.இந்த விடயம், தற்போது இலங்கை மக்களுக்கும் வெளிச்சமிடப்பட்ட தகவலாக மாறியுள்ளது.எனவே மோடியின் பயணத்துக்கு பின்னர் அதானியின் போக்கில் மாற்றம் ஏற்படுமா? அனுரவின் போக்கில் மாற்றம் ஏற்படுமா? அல்லது அரசியல் தேவையை கருத்திற்கொண்டு மன்னார் மக்களின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இந்த திட்டத்தை கைவிடுமா?…

  • 51 views
சிங்கள மக்கள் மனங்களில் இந்தியா

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது அபிவிருத்தி திட்டங்களும் முதலீட்டுத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.இது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நன்மை தரும் திட்டங்களாகவே அமைந்துள்ளன.இந்தியாவை பொறுத்தவரை, இது இலங்கைக்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. இதனால் சிங்கள மக்களே அதிகம் நன்மைப் பெறுகின்றனர்.எனினும் இந்தியாவினால், சிங்கள மக்களின் மனங்களை இன்னும் முழுமையாக வெல்லமுடியவில்லை.இந்தியா, இன்னும் இந்த விடயத்தில் சீனாவை விட பின்தங்கியே இருக்கிறது.இதனை நிவர்த்தித்து, சிங்கள மக்கள் மத்தியில் நிலைபெற இந்தியா உரிய திட்டங்களை பின்பற்றவேண்டும்.எனினும் இந்தியாவிடம் அதற்கான முன்னெடுப்புக்கள் உள்ளனவா என்பதில் தெளிவில்லை. India in the minds of the Sinhalese people Development projects and investment projects are to be launched during the Indian Prime Minister’s visit to Sri Lanka These are projects that will benefit both Sri Lanka and India.As far as India is concerned, this is helping Sri Lanka to a great extent. The Sinhalese people are the ones who benefit the most.However, India has not yet been able to…

  • 47 views
அரசியல் தலைமைத்துவத்துக்காக ஏங்கும் தமிழ் மக்கள்

அரசியல் தலைமைத்துவத்துக்காக ஏங்கும் தமிழ் மக்கள்இலங்கையின் வரலாற்றில் இன்று தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களை கொண்டு நிரப்பமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.வடக்கில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளில் நம்பிக்கையில்லை என்ற வகையில்தான் அங்குள்ள மக்கள் அனுரவின் தேசிய மக்கள் சக்திக்கு இந்த முறை வாக்களித்தனர்.அத்துடன் அர்ச்சுனா ராமநாதனையும் தெரிவு செய்தனர்எனினும் இதில் அர்ச்சுனா ராமநாதனின் அரசியல், காலத்துக்கு ஒவ்வாத தமிழர்களை கொச்சைப்படுத்தும் அரசியலாக பார்க்கப்படுகிறது.எனவே வடக்கில் இன்று தலைமைத்துவத்துக்கு புதிய அமைப்புக்கள் தேவைப்படுகின்றன.ஏற்கனவே முன்னைய காலத்தில் செயற்பட்டதைப்போன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகமும், சிவில் குழுக்களும் இந்த விடயத்தில் உடனடியாக கவனத்தை செலுத்துவேண்டும்.இதுவே காலத்தின் கட்டாயம். Tamil people yearn for political leadershipToday, in the history of Sri Lanka, there is a political leadership vacuum for the Tamil people.The Tamil nation has been pushed to a point where it cannot be filled by those currently involved in politics.The people there voted for Anurag’s National People’s Power this time…

  • 56 views
பிரித்தானியாவின் தடை தமிழர்களின் காயங்களை சுகப்படுத்தாது, Britain’s ban will not heal the wounds of Tamils,බ්‍රිතාන්‍යයේ තහනම දෙමළ ජනතාවගේ තුවාල සුවපත් නොකරනු ඇත

பிரித்தானியா இலங்கையின் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி, முன்னாள் இராணுவத்தளபதிகள் இருவர், முன்னாள் கடற்படை தளபதி மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா ஆகியோருக்கு எதிராக தடையை அறிவித்துள்ளது.இந்த தடையும் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பின்னரே, மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உடனடியாக எதுவுமே கிடைக்கப்போதில்லை.எனினும் எதிர்பார்க்கப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உதவும் என்று நம்பப்படுகிறதுஇந்தநிலையில், இலங்கையில் போர்க்குற்றம் ஒன்று இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தது இனப்பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும்எனினும் இந்த பிரச்சினை, பிரித்தானிய இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது விட்டு சென்ற நிர்வாக குறைபாடே என்பதை அந்த நாடு பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதன் காரணமாக இனப்பிரச்சினையால் வடக்குகிழக்கு மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இன்னும் உரிமையற்றவர்களாக உள்ளனர்எனவே இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தப்பிரச்சினைகளுக்கும் தீர்வை தரவேண்டிய தார்மீகப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கு உள்ளது என்பது மறுக்கமுடியாதது. Britain’s ban will not heal the wounds of Tamils Britain has announced a ban on two former army chiefs, a former navy chief and a former deputy minister, Karuna,…

  • 58 views
இலங்கையை எச்சரிக்கும் பிரித்தானிய தடை,British ban warns Sri Lanka,බ්‍රිතාන්‍ය තහනම ශ්‍රී ලංකාවට අනතුරු අඟවයි

பிரித்தானியாவில் இலங்கையின் முன்னாள் இரர்ணுவ அதிகாரிகள் மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகவே கருதப்படவேண்டும்.இலங்கையின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனிதாபிமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.எனினும், அது தொடர்பில் இலங்கை அரசாங்கங்கள் தமது பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தவில்லை.பொறுப்புக்கூறலுக்கு வெளியகத்தலையீடு அவசியம் இல்லையென்று இலங்கை அரசாங்கங்கள் கூறினாலும், உள்ளகப்பொறிமுறையின் கீழ் எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை.இதன் காரணமாக ஏற்கனவே அமெரிக்காவும் இதுபோன்ற தடையை விதித்துள்ளது.எனவே முன்னைய அரசாங்கங்களை காட்டிலும் தற்போதைய அரசாங்கத்தின் மீது பொறுப்புக்கூறல் சுமத்தப்பட்டுள்ளது.இந்தப் பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுமானால், வெளியக விசாரணைகளை தடுக்கமுடியாத நிலை ஏற்படலாம். British ban warns Sri LankaThe ban imposed on former Sri Lankan military officers and Karuna Amman in Britain should be seen as a warning to the Sri Lankan government.War crimes and humanitarian crimes have been leveled against Sri Lanka.However, Sri Lankan governments have not shown their accountability in this regard.Although Sri Lankan governments claim that external intervention is not necessary for accountability, they have…

  • 38 views
போலிச்செய்திகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? How can fake news be controlled? ව්‍යාජ ප්‍රවෘත්ති පාලනය කරන්නේ කෙසේද?

இலங்கையில் நாளாந்தம் வெளியாகும் போலிச் செய்திகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இன்னும் தெளிவில்லை.சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இந்த போலிச்செய்திகளை விரைவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றன.இதனை கட்டுப்படுத்துவது என்பது யதார்த்தமான விடயமல்ல என்;பது அனைவருக்கும் தெரியும். கட்டுப்படுத்தினால் அது ஊடக அடக்குமுறைக்குள் வந்துவிடும்.எனவே, இது தொடர்பான தாக்கங்களையும், சட்டசிக்கல்களையும் சமூகத்திடம் தெளிவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கலாம். How can fake news be controlled?It is still unclear what action the government will take regarding the fake news that is being published daily in Sri Lanka.The dominance of social media is rapidly spreading this fake news among the people.Everyone knows that controlling this is not a realistic matter. If it is controlled, it will fall under media repression.Therefore, the government can try to clarify the implications and legal issues related to this to the society. ව්‍යාජ ප්‍රවෘත්ති පාලනය කරන්නේ කෙසේද?ශ්‍රී ලංකාවේ දිනපතා ප්‍රකාශයට…

  • 43 views
ஸ்டார்லிங்கும் தேசிய பாதுகாப்பும்

எலான் மஸ்கின் ஸ்டார்லிங் ப்ரோட்பேன்ட்டின் சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கையை பாராட்டலாம்.குறித்த சேவையை பெற்றுக்கொள்ளும் தனிநபர்கள், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டால், குறித்த சேவையை இடைமறிக்கும் உரிமை இன்னும் இலங்கைக்கு தரப்படவில்லை.முன்னைய ரணிலின் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறதுஎனவே அந்த உரிமையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தரப்புக்கள் கூறுகின்றன.

  • 34 views
ரணில் தண்டிக்கப்படுவாரா? யதார்த்தம் என்ன?

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி ரணிலின் குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர் தண்டிக்கப்படுவாரா? என்பதே இப்போது இலங்கையர்கள் மத்தியில் உள்ள கேள்வியாகும்.இதற்கு மத்தியில் மரண தண்டனைக்கு உரித்தான குற்றங்களை தவிர ஏனைய குற்றங்கள் தொடர்பில் 20 வருடங்களுக்கு பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாது, அத்துடன் இந்த விடயத்தில்; வழக்கை தொடுப்பதா இல்லையா என்பது சட்டமா அதிபரின் கைகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.எனவே உள்ளூர் மட்டத்தில் ரணிலுக்கு எதிராக நடவடிக்கை சாத்தியமாகுமா? என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.அதற்கு அப்பால் சர்வதேசத்துடன் இலங்கையை இணைத்த ரணிலை குற்றவாளியாக காண சர்வதேசமும் விரும்பாது என்பதும், யதார்த்தமான கருத்தாகும்.அதேநேரம் தற்போதைய நிலையில் சர்வதேசத்தை பகைத்துக்கொள்ள ஜேவிபி பிரதான கட்சியாகக் கொண்ட, அனுரவின் தேசிய மக்கள் சக்தியும் விரும்பாது, முடியாது என்பதும் யதார்தமான கருத்தாகும்.