ஒரே குட்டையில் ஊறிய மட்டை,A single puddle of mud,තනි මඩ ගොහොරුවක්


இலங்கையில் தீவிரமான தேர்தல் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்போது கொள்கை, கோத்திரங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமைக்கு உதாரணங்களும் நிகழ்கின்றன.
இதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்தும் அடங்குகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசசபைகளுக்கு நிதியொதுக்கீடுகளை கண்ணை மூடிக்கொண்டு வழங்கப்படும் என்றும்;, ஏனைய கட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்ட சபைகளின் நிதியொதுக்கீடுகள் தொடர்பில் பல தடவைகள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொள்கைகளையே முன்னைய ஜனாதிபதிகளும் கடைப்பிடித்தனர்.
அந்தக் கொள்கையே, உள்ளூர் மட்டத்தில், ஆளும் கட்சிகளின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு வழிவகுத்தது என்பதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

A single puddle of mud

Sri Lanka is engaged in intense electoral politics.
There are also examples of political and tribal differences not being taken into account.
This includes the comments of President Anura Kumara Dissanayake.
He has stated that financial allocations to the local Councils governed by the National People’s Power will be provided blindly, and that the financial allocations of the councils governed by other parties will be reviewed several times.
These are the same policies that previous presidents also followed.
It must be pointed out that this policy has led to corruption and fraud by the ruling parties at the local level.

  • Related Posts

    • 9 views
    ஆறே வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை!

    கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் *தினேஷ் ஹெதாவ்*, 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது “இலங்கையின் இளம்…

    • 15 views
    சீனாவில் தொங்குபாலம் அறுந்து ஐவர் பலி – 24 பேர் காயம்

    சீனாவின் கசாக் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரிலுள்ள தொங்கு பாலத்தின் கேபிள் திடீரென அறுந்ததனால் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இச்சம்பவத்தில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாகவும் கூறுப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *