
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி ரணிலின் குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர் தண்டிக்கப்படுவாரா? என்பதே இப்போது இலங்கையர்கள் மத்தியில் உள்ள கேள்வியாகும்.
இதற்கு மத்தியில் மரண தண்டனைக்கு உரித்தான குற்றங்களை தவிர ஏனைய குற்றங்கள் தொடர்பில் 20 வருடங்களுக்கு பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாது, அத்துடன் இந்த விடயத்தில்; வழக்கை தொடுப்பதா இல்லையா என்பது சட்டமா அதிபரின் கைகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே உள்ளூர் மட்டத்தில் ரணிலுக்கு எதிராக நடவடிக்கை சாத்தியமாகுமா? என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.
அதற்கு அப்பால் சர்வதேசத்துடன் இலங்கையை இணைத்த ரணிலை குற்றவாளியாக காண சர்வதேசமும் விரும்பாது என்பதும், யதார்த்தமான கருத்தாகும்.
அதேநேரம் தற்போதைய நிலையில் சர்வதேசத்தை பகைத்துக்கொள்ள ஜேவிபி பிரதான கட்சியாகக் கொண்ட, அனுரவின் தேசிய மக்கள் சக்தியும் விரும்பாது, முடியாது என்பதும் யதார்தமான கருத்தாகும்.