• 9 views
ஆறே வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை!

கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் *தினேஷ் ஹெதாவ்*, 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது “இலங்கையின் இளம்…

  • 14 views
Whatsapp இல்லாதவர்களிடமும் இனி உரையாட முடியும் – புதிய அம்சம்!

Whatsapp செயலி இல்லாதவர்களுடனும் உரையாடக் கூடிய வகையில் புதிய அம்சம் நடைமுறைக்கு வரவுள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்சப் செயலி பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிதாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதேபோன்று, தற்போது வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் விருந்தினர் அரட்டை (Guest Chat) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தில், வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி அழைப்பு விடுக்க முடியும். இந்த லிங்க்கை, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும். இந்த லிங்கை கிளிக் செய்தால், பிரௌசரில் தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் வாட்சப் செயலியை டவுன்லோட் செய்யாமலே உரையாட முடியும். ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. இந்த உரையாடல் end-to-end encryption செய்யப்பட்டுள்ளதால், இதனை வேறு யாரும் அணுக முடியாது. தற்போது இந்த அம்சம் (Beta) உருவாக்கத்தில் உள்ள நிலையில், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

  • 12 views
மக்களது விருப்பமின்றி திட்டங்களைத் திணிக்க முடியாது – ரவிகரன் காட்டம்!

கடந்த யுத்த காலத்தில் “பாதுகாப்பு வலயம்” என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஒப்பிட்டு, மக்கள் இத்திட்டத்தால் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சுவதாகவும், இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மக்களும், பொது அமைப்புகளும் காற்றாலை மின்உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், இத்திட்டம் மன்னார்த் தீவில் அமைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்கிறார். மக்களின் எதிர்ப்பையும் மீறி, காற்றாலைக் கோபுரங்களின் பாகங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார்த் தீவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். மக்கள் விரும்பாத ஒரு திட்டத்தை அத்துமீறி திணிக்க முடியாது எனவும், அரசு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனால், மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • 14 views
BYD வாகனங்கள் தடுத்துவைப்பு – வெகுண்டெழுந்த ஜோன் கீல்ஸ்!

இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு, இன்று (08) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் CG நிறுவனம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதான வரிகளுக்கு இடையிலான வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட கிட்டத்தட்ட 3.6 பில்லியன் ரூபாய் தொகையை, ஒரு அரச வங்கியில் உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், மனுதாரர் நிறுவனம் அந்த உத்தரவாதத்திற்கு பொருந்தக்கூடிய வட்டியை செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • 14 views
தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் யோகி பாபு – குர்ரம் பாப்பி ரெட்டி மூலம் அறிமுகம்!

​தெலுக்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகிய பிரம்மானந்தத்துடன் இணையவுள்ளார் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு. தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இப்போது தனது தனித்துவமான நடிப்பை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுவந்து சேர்க்கவுள்ளார். முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவையின் லெஜன்டாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவது காரணமாக, இப்படத்துக்குத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. நடிகர் பிரம்மானந்தம் தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்து, இருவரும் மனம் திறந்து பேசினர். அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள புத்தகம் “நான் பிரம்மானந்தம்” என்பதை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார். இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு மனமுவந்த பேச்சில் கூறுகிறார்: தெலுங்கு சினிமா…