சிங்கள மக்கள் மனங்களில் இந்தியா

இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது அபிவிருத்தி திட்டங்களும் முதலீட்டுத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நன்மை தரும் திட்டங்களாகவே அமைந்துள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, இது இலங்கைக்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. இதனால் சிங்கள மக்களே அதிகம் நன்மைப் பெறுகின்றனர்.
எனினும் இந்தியாவினால், சிங்கள மக்களின் மனங்களை இன்னும் முழுமையாக வெல்லமுடியவில்லை.
இந்தியா, இன்னும் இந்த விடயத்தில் சீனாவை விட பின்தங்கியே இருக்கிறது.
இதனை நிவர்த்தித்து, சிங்கள மக்கள் மத்தியில் நிலைபெற இந்தியா உரிய திட்டங்களை பின்பற்றவேண்டும்.
எனினும் இந்தியாவிடம் அதற்கான முன்னெடுப்புக்கள் உள்ளனவா என்பதில் தெளிவில்லை.

India in the minds of the Sinhalese people

Development projects and investment projects are to be launched during the Indian Prime Minister’s visit to Sri Lanka

These are projects that will benefit both Sri Lanka and India.
As far as India is concerned, this is helping Sri Lanka to a great extent. The Sinhalese people are the ones who benefit the most.
However, India has not yet been able to completely win the minds of the Sinhalese people.
India is still lagging behind China in this regard.
India should follow appropriate plans to address this and establish itself among the Sinhalese people.
However, it is not clear whether India has any initiatives for this.

සිංහල ජනතාවගේ සිත් තුළ ඉන්දියාව

ඉන්දීය අග්‍රාමාත්‍යවරයාගේ ශ්‍රී ලංකා සංචාරය අතරතුර සංවර්ධන ව්‍යාපෘති සහ ආයෝජන ව්‍යාපෘති දියත් කිරීමට නියමිතය.

මේවා ශ්‍රී ලංකාවට සහ ඉන්දියාවට යන දෙකටම ප්‍රතිලාභ ලැබෙන ව්‍යාපෘති වේ.
ඉන්දියාව සම්බන්ධයෙන් ගත් කල, මෙය ශ්‍රී ලංකාවට බොහෝ දුරට උපකාරී වේ. සිංහල ජනතාවට තමයි වැඩිම ප්‍රතිලාභ ලැබෙන්නේ.
කෙසේ වෙතත්, ඉන්දියාවට තවමත් සිංහල ජනතාවගේ සිත් සම්පූර්ණයෙන්ම දිනා ගැනීමට නොහැකි වී තිබේ.
මේ අතින් ඉන්දියාව තවමත් චීනයට වඩා පසුපසින් සිටී.
මෙයට පිළියම් යෙදීමට සහ සිංහල ජනතාව අතර ස්ථාපිත වීමට ඉන්දියාව සුදුසු සැලසුම් අනුගමනය කළ යුතුය.
කෙසේ වෙතත්, මේ සඳහා ඉන්දියාවට කිසියම් මුලපිරීමක් තිබේද යන්න පැහැදිලි නැත.

  • Related Posts

    • 9 views
    ஆறே வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை!

    கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் *தினேஷ் ஹெதாவ்*, 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது “இலங்கையின் இளம்…

    • 15 views
    சீனாவில் தொங்குபாலம் அறுந்து ஐவர் பலி – 24 பேர் காயம்

    சீனாவின் கசாக் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரிலுள்ள தொங்கு பாலத்தின் கேபிள் திடீரென அறுந்ததனால் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இச்சம்பவத்தில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாகவும் கூறுப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *